What about the alliance led by BJP
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள் தங்கள் கூட்டணி விவகாரங்கள் பற்றி முடிவெடுக்கும் தருவாயில் உள்ளன. இந்த நிலையில், பாஜகவின் முக்கிய பிரமுகரான பி.எல். சந்தோஷ் ஒரு மாத இடைவெளிக்குள் மீண்டும் தமிழ்நாடு வருகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு பிப்ரவரி 1 ஆம் தேதி நடந்த போது, டாக்டர் ராமதாசுக்கு பாரத் ரத்னா விருது கொடுக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி வருத்தப்பட்டிருந்தார்.
அதன் பிறகு பேசிய டாக்டர் ராமதாஸ் எனக்கு விருது கொடுக்கப்பட்டிருந்தால் கூட வாங்கி இருக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். மேலும், அந்தக் கூட்டத்தில் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார் அன்புமணி.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்ற கேள்வி அந்த கட்சியினர் மத்தியிலேயே குழப்பமாக எதிரொலிக்கிறது.
தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என்று அண்ணாமலை தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால், இதுவரை அதற்கான சூழல் அமையவில்லை.
அதிமுகவும் கூட்டணிப் பேச்சுவார்த்தை குழு அமைத்தும் எந்த கட்சியோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
இந்த நிலையில், ‘இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. திமுகவை வீழ்த்த மீண்டும் கூட்டணி அமைப்போம் வாருங்கள்’ என்று எடப்பாடி பழனிசாமியை அரசியலுக்கு அப்பாற்பட்ட வட்டாரங்கள் மூலம் அணுகிக் கொண்டிருக்கிறது டெல்லி பாஜக என்று சேலம் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
இந்த சூழலில் பாஜகவின் அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் பிப்ரவரி 4 ஆம் தேதி கோவை வருகிறார். ஜனவரி மாதம் ஒரு முறை கோவை வந்த சந்தோஷ் ஆர்.எஸ்.எஸ், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ,மாநில நிர்வாகிகள் மற்றும் 39 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் ஆகியோரை சந்தித்து ஆய்வுக் கூட்டம் நடத்த இருக்கிறார் பி.எல். சந்தோஷ்.
ஒவ்வொரு தொகுதியிலும் பாஜகவின் பலம் என்ன, குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி பாஜகவின் வாக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வழிகள் பற்றியெல்லாம் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.
மேலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலை என்ன என்பது குறித்து அண்ணாமலையிடம் அவ்வப்போது விசாரித்து வருகிறார் சந்தோஷ். இந்த கூட்டத்திலும் இது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்படும் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை!
வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி!
What about the alliance led by BJP