what 2018 exit poll to deliver

எக்ஸிட் போல் பலிக்குமா? 2018 சொல்லும் மெசேஜ்!

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல்களுக்காக, நவம்பர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை கருத்துக் கணிப்புகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது.

இந்த நிலையில் கடைசி மாநில தேர்தலான தெலுங்கானாவில் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணிக்கு முடிவடையும் நிலையில் எக்ஸிட் போல் முடிவுகளை இன்று மாலை 5.30 மணிக்குப் பிறகு அறிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

எக்ஸிட் போல் என்றால் என்ன?

வாக்குப்பதிவு நாளன்று வாக்குச் சாவடியிலிருந்து வெளியேறிய வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதன் அடிப்படையில் ஏஜென்சிகளால் நடத்தப்படும் கணக்கெடுப்பு ஆகும்.

இது வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் வேட்பாளர்களுக்கான ஆதரவை மதிப்பிடுவதற்கு இது உதவுகிறது.

2018 எக்ஸிட் போல் கணிப்பு ஒரு பார்வை!

மத்தியப் பிரதேசம்

2018 ஆம் ஆண்டில் தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்பின்படி, மத்தியப் பிரதேசத்தில் பாஜக முன்னிலையில் இருக்கும் என்று கணித்திருந்தது. ஆனால் 114 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. எனினும் பெரும்பான்மை இடம் கிடைக்காததால் பிஎஸ்பி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தது.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கணித்தபடி 100 தொகுதிகளில் வெற்றிபெற்று பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

தெலுங்கானா

தெலுங்கானாவில் டிஆர்எஸ் (இப்போது பிஆர்எஸ்) வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டது. அதன்படியே சந்திரசேகர ராவ் தலைமையிலான டிஆர்எஸ் 88 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கரில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் மொத்தமுள்ள 100 தொகுதிகளில் 68ல் வென்று பெரும்பான்மையுடன் 15 வருடங்களுக்கு பிறகு  ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ். பாஜக 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது.

மிசோரம்

மிசோரமில் காங்கிரஸ் மற்றும் மிசோ தேசிய முன்னணி(எம்என்எப்) இடையே கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டது. ஆனால் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களை வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது எம் என் எப்.  5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ், ஆட்சியை இழந்தது. மேலும் இந்த தேர்தலுடன் வடகிழக்கு இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி  இல்லாத நிலையும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு எக்ஸிட் போல் கருத்து கணிப்பு கூறியபடி மொத்தமுள்ள 5  மாநிலங்களில் 2ல் மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்பட்டன.

கருத்துக் கணிப்புகள் எவ்வளவு சரியானவை?

சமீபத்திய சில தேர்தல்களில் எக்ஸிட் போல் கணிப்புகள் மாறாக முடிவுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகள் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கூறின. ஆனால் காங்கிரஸ் பெரும்பான்மை வெற்றியுடன் ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தெலுங்கானா தேர்தல்: மதியம் வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்!

பிரபாஸின் கல்கி: கமல்ஹாசனின் ஆக்‌ஷன் ஆரம்பம்!

 

 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *