மேற்கு வங்க புதிய ஆளுநராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், மணிப்பூர் ஆளுநரான இல.கணேசனுக்கு மேற்கு வங்கத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் கடந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் மாதம் இறுதியில் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர், மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநராய்ப் பதவி வகித்து வந்த ஜக்தீப் தங்கர், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன்பே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, மணிப்பூர் ஆளுநரான இல.கணேசனுக்கு, மேற்கு வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்கு வங்க புதிய ஆளுநராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார்.
ஜெ.பிரகாஷ்
ஆளுநரை உடனே திரும்பப் பெறுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!
சவுக்கு சங்கர் 3ஆவது முறையாக கைது!