நீதிபதியிடம் மம்தா வைத்த முக்கிய கோரிக்கை!

அரசியல்

கொல்கத்தாவில் உள்ள தேசிய நீதியியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று (அக்டோபர் 30 ) நடைபெற்றது.

இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய மம்தா பானர்ஜி, நாட்டில் ஜனநாயக அமைப்புகள் முடக்கப்படுவதாக கவலை தெரிவித்தார். இந்த போக்கு தொடர்ந்தால், இது நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார்.

west bengal mamatabanerjee uu lalit

மேலும் ,”சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் அனைத்து ஜனநாயக அதிகாரமும் கைப்பற்றப்படுகிறது. துன்புறுத்தலில் இருந்து மக்களை நீதித்துறை பாதுகாக்க வேண்டும். ஜனநாயகம் எங்கே போய் விட்டது? தயவு செய்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்” என்று தலைமை நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

நீதிபதி யு.யு. லலித்தை நான் வாழ்த்த வேண்டும். இரண்டு மாதங்களில், நீதித்துறை என்றால் என்ன என்பதை அவர் காட்டியுள்ளார் என்றும் மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று நான் கூறவில்லை, ஆனால் தற்போது நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. நீதித்துறை மக்களை அநீதியிலிருந்து காப்பாற்றி அவர்களின் கூக்குரலைக் கேட்க வேண்டும்” என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டி20 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 134 ரன்கள் இலக்கு!

கோவை கார் வெடிப்பு: காவல் துறையிடம் கேள்வி கேட்ட அண்ணாமலை

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *