”இந்தியா கூட்டணியில் சேரமாட்டோம்” : தெலுங்கு தேசம் உறுதி!

அரசியல் இந்தியா

இந்தியா கூட்டணியுடன் தெலுங்கு தேசத்தை இணைக்கப்போவதில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் உறுதி அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

பாஜக வெறும் 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சி ஆட்சி அமைக்க இன்னும் 32 இடங்கள் தேவைப்படுகிறது. இதனால் பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து இம்முறை ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நிலையில், ஆந்திர மாநில பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கத் தயாராகி வருகிறது.

மேலும் ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளில் 16 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான ஷரத் பவார் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகின.

@ANI's video Tweet

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவரான கனகமேடலா ரவீந்திரகுமார் பேசுகையில், “ஆந்திரப் பிரதேசத்தில் பாஜக மற்றும் ஜனசேனாவுடன் எங்கள் தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தம் வெறும் அரசியல் கணக்கு மட்டும் அல்ல; இது நம்பகத்தன்மையின் விஷயம். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நாங்கள் உறுதியளித்துள்ளோம். தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாகவே இருக்கும். இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பற்றி எந்த பேச்சும் இல்லை,” என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

காதலருடன் சுற்றுலா சென்ற பிரியா பவானி சங்கர்… வைரல் புகைப்படம்..!

பியூட்டி டிப்ஸ்: எந்த வயதிலிருந்து குழந்தைகளுக்கு உடற்பயிற்சிகள் அவசியம்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
6
+1
0
+1
0