எங்கள் தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் பெரியார் என்று முதலவ்ர் ஸ்டாலின் கூறியுள்ளார். we will not give respect
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 31) வடசென்னை வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கன்னிகாபுரம் பகுதியில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ரூ.44.15 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சிக்கு பின், வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்காக சட்டப்பேரவையில் ரூ.1,000 கோடி முதலில் ஒதுக்கி அறிவிக்கப்பட்டது. ஆனால் ப்லவேறு துறைகளின் ஒத்துழைப்போடு ரூ.6,350 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு வருடத்துக்குள் அணைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வட சென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றுவோம்” என்றார்.
ஆளுநர் செய்வது ஒன்றா, இரண்டா… we will not give respect

ஆளுநர் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “ஒன்று, இரண்டல்ல… எல்லா பிரச்சினையிலும் அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அது எங்களுக்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்பு சேர்ப்பதால் அவர் அப்படியே செயல்பட வேண்டும்” என கூறினார்.
மரியாதை இல்லை… we will not give respect

சீமான் பெரியாரை தொடர்ந்து அவமதிக்கும் வகையில் பேசி வருவகிறாரே என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “பெரியாரை மரியாதைக் குறைவாக பேசுபவர்களுக்கு நாங்கள் மரியாதை கொடுக்க விரும்பவில்லை. பெரியார் எங்கள் தலைவருக்கு எல்லாம் தலைவர். பெரியாரை விமர்சிப்பவர்களை எல்லாம் நாங்கள் பொருட்படுத்த விரும்பவில்லை” என்று பதிலளித்தார்.
மேலும் அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதனால்தான் வெளிநாடு வெளி மாநிலங்களில் இருந்து தொழிற்சாலை இங்கு வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அங்கொன்றும், இங்கொன்றும் நடப்பதை எதிர் கட்சிகள் பூதாகரமாக்குகின்றன” என குறிப்பிட்டார். we will not give respect