திமுக-மதிமுக இடையேயான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (பிப்ரவரி 29) காலை அறிவாலயத்தில் நடந்தது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. We will not contest on dmk symbol
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அறிவாலய வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ்,
“இரண்டு மக்களவை, ஒரு மாநிலங்களவை என நாங்கள் கேட்டிருந்தோம். இப்போது ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை என்று கேட்டிருக்கிறோம். அதுவும் எங்கள் கட்சி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்றும் உறுதியாக சொல்லியிருக்கிறோம். தலைமையைக் கலந்துவிட்டு சொல்கிறோம் என்று திமுக தரப்பில் சொல்லியிருக்கிறார்கள்” என்றவர் தொடர்ந்து,
“இங்கே வரும் முன் பொதுச் செயலாளார் வைகோவிடம் ஆலோசனை நடத்திவிட்டு வந்திருக்கிறோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிர்பந்தத்தை எப்போதும் ஏற்க மாட்டோம்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்று தெரியவில்லை, இன்னும் அவர்கள் நேரம் ஒதுக்கவில்லை” என்றார் அர்ஜுன் ராஜ்.
திமுக கூட்டணியில் கடந்த 2019 தேர்தலில் மதிமுக ஒரு மக்களவையில் போட்டியிட்டது. வைகோவுக்கு ஒரு ராஜ்யசபா இடம் அளிக்கப்பட்டது. அதேபோல இப்போதும் ஒரு மக்களவை, ஒரு ராஜ்யசபா வேண்டும் என்று மதிமுக கேட்டு வருகிறது.
ஆனால் திமுக தரப்பிலோ, ‘அப்போது வைகோவை ராஜ்யசபாவுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக பிரத்யேகமாக அளிக்கப்பட்டது. அதை தொடர வேண்டும் என அவசியமில்லை.
மேலும் கூட்டணிக் கட்சிகள் அவரவர் சின்னத்தில் நிற்கும் பட்சத்தில், உதயசூரியன் சின்னத்தில் நிற்கும்போது கிடைப்பதை விட வெற்றிவாய்ப்பு குறைவாகவே இருப்பதாக ஸ்டாலின் கருதுகிறார்.
எனவேதான் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வலியுறுத்துகிறோம். தேமுதிக கூடத்தான் அவர்களின் சின்னத்தில் அவ்வளவு எம்.எல்.ஏ.க்களை வென்றார்கள். அடுத்தடுத்து அவர்களின் நிலையைப் பார்த்தீர்களா?” என்று திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதிமுகவுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்ற தகவல் இதுவரை இல்லை.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆர்.ஜே.பாலாஜி Vs ஹெச். வினோத் : தளபதி 69 இயக்குநர் யார்?
மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!
We will not contest on dmk symbol