பன்னீருடன் இனி சேரவே மாட்டோம்! நீதிமன்றத்தில் எடப்பாடி

அரசியல்

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.

எடப்பாடி வாதம்

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு விசாரணை இன்று(ஆகஸ்ட் 25) நடைபெற்று வருகிறது.

முதலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தனது வாதங்களை எடுத்து வைத்திருக்கிறது. அவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், அரியமா சுந்தரம் உள்ளிட்ட மூவர் வாதிட்டனர்.தனிநபர் பயனடைய யூகங்களின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பதாகக் குற்றம்சாட்டினார் வைத்தியநாதன். இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் அரியமாசுந்தரம் வாதிட்டார்.

தனி நீதிபதி தீர்ப்பு தவறு

அதில், “உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையிலும், வழக்கு கோரிக்கையை மீறி உள்ளதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கட்சிகள் தங்களது சட்டதிட்ட விதிகளின்படியே செயல்படுகிறது.. தனி நீதிபதி வழக்கை அணுகிய விதமே தவறானது. கட்சி விதிகள்படி பொதுக்குழு மட்டும் தான் கட்சி நிர்வாகம் குறித்த முடிவுகள் எடுக்கும். பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளே இறுதியானது.

கட்சியினர் அதற்கு கட்டுப்பட வேண்டும் என கட்சி விதிகளில் கூறப்பட்டுள்ளது. அடிப்படை தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை என தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு. இந்த காரணத்துக்காகவே தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்யலாம்.

அடிப்படை உறுப்பினர்களுக்கு அதிகாரமில்லை

கட்சி விதிகளை புறக்கணித்து தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அடிப்படை உறுப்பினர்கள் முடிவு எடுக்க அதிகாரமில்லை. அதுபற்றி கட்சி விதிகளில் எதுவும் குறிப்பிடவில்லை. பொதுக்குழுவுக்கு அடிப்படை உறுப்பினர்களை அழைக்கவில்லை.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இருவரும் இணைந்து செயல்பட முடியாது. ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் தான் வழக்கே தொடரப்பட்டது.

**கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு**

அதிமுகவின்  ஒன்றரை கோடி உறுப்பினர்களின் உரிமை பாதிக்கப்படவில்லை. தனி மனித உரிமை பாதிக்கப்பட்டதால் தான் பன்னீர்செல்வம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படாத நிலையில்  பொதுக்குழு உறுப்பினர்கள் செயல்படுவர்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் செயல்பாடே முடங்கியுள்ளது.

கூட்டம் நடத்த கூடாது என ஒருங்கிணைப்பாளர் வழக்கு தொடர்ந்த நிலையில் இருவரும் இணைந்து தான் கூட்ட வேண்டும் என உத்தரவிட்டது விபரீதமானது” என்று வாதத்தை நிறைவு செய்தார் அரியமாசுந்தரம்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் தனது வாதத்தைத் தொடங்கினார்.

கலை.ரா

தூத்துக்குடி படுகொலையும் எடப்பாடி பழனிசாமியும்

+1
0
+1
3
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.