ஜனநாயகத்தை வென்றெடுக்கும் வரை ஒன்றிணைந்து போராடுவோம் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா தெரிவித்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்கட்சிகள், பிரதமர் மோடிக்கும், பாஜக அரசுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டதை கண்டித்து இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தினர். ஜனநாயகத்திற்கு ஆபத்து என்ற வாசகம் கொண்ட பதாகையை ஏந்தியபடி பேரணியில் ஈடுபட்டனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, “நாடு இன்றைக்கு சட்டத்தை மதிக்காத எதேச்சிகார, ஏகாதிபத்திய போக்கை எதிர்கொண்டிருக்கிறது.
140 கோடி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் நாடாளுமன்றத்தை சட்டபடி நடத்தாத அரசை இந்த நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் வரை முழு இருள் நீடிக்கும். ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் வரை எங்களின் ஒன்றிணைந்த போராட்டம் தொடரும்” என்றார்.
அதுபோன்று, மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இதுவரை இல்லாத புதிய நடைமுறை சட்டத்தை கொண்டு வந்து ராகுல் காந்தியை தண்டித்திருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
பிரியா
கருப்பு சட்டையுடன் சட்டமன்றத்தை முற்றுகையிடும் காங்கிரஸ்
பிரதமர் ஒரு கோழை: பிரியங்கா காந்தி தாக்கு!