”சனாதனத்தை அறிந்த நாங்கள் சொல்கிறோம்… அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்” – ஆ.ராசா

Published On:

| By Jegadeesh

We who know Sanatana say it is something eradicated

சனாதனத்தை அறிந்த நாங்கள் சொல்கிறோம்.. விரைவில் டெல்லி வரை சனாதன தர்மம் என்றால் என்ன? அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றுதான், அதிலே எங்களுக்கு கூச்ச நாச்சமில்லை என்பதை சொல்லக் கூடிய மன திடத்தை திமுகவின் கடைசி தொண்டனும் பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம் என்று ஆ.ராசா கூறியுள்ளார்.

திமுக சார்பில் செப்டம்பர் மாதம் திராவிட மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ‘TwitterSpaces’ என்ற நிகழ்ச்சியை ’எக்ஸ்’ சமூக வலைதளபக்கத்தில் நடத்தி வருகிறது.

முன்னதாக அதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, வி.சி.க மாநில துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் உரையாற்றினார்கள்.

அந்தவகையில், நேற்று (செப்டம்பர் 4) , “கலைஞரும் இந்தியாவும்” என்ற தலைப்பில் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு, ”சனாதனம் என்றாலே ஆரிய மதம். அது ஆரியர்கள், பிராமணர்களுக்கு சொந்தமானது. அந்த ஆரிய மதமோ, பிராமணிய மதமோ திராவிடத்தில் எப்போதும் இருந்தது இல்லை.

சோழர் காலத்தில் ஊடுருவியது. அதனால்தான் நமக்கு சனாதன உணர்வு எதுவும் இல்லை. சனாதனம் என்பது 4 வர்ணத்தை குறிப்பது.

சனாதனம் என்பது ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக் கொள்வது. சனாதனம் என்பது ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் சமூகம் அமைதியாக இருக்கும் என்ற தத்துவத்தை அன்றைக்கு சொன்னது.

ஒரு ஊரில் 2 பார்பர் இருக்கனும்.. 4 டோபி இருக்கனும்.. ஒரு வண்ணார் இருக்கனும்.. மருத்துவர் இருக்கனும்.. பிணத்தை தூக்க ஆதி திராவிடர் இருக்கனும்.. செருப்பு தைக்க அருந்ததியர் இருக்கனும்.. உழைப்பதற்கு நான்கு இடைநிலை சாதிகள் இருக்கனும்.

இதை ஆள்வதற்கு பெரிய ஜாதி இருக்கனும். ஓதுவதற்கு பிராமணர்கள் இருக்கனும். அதற்கு கோவில் இருக்கனும். கோவிலுக்கு பல ஏக்கர் சொத்து இருக்கனும். இவைதான் சனாதனம் சொன்ன சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக அமைதி.

இதனால் அவர்களுக்கு கல்வி கொடுக்காமல் வேலைகளை மட்டும் ஒதுக்கினார்கள். கல்வியை மறுத்து அந்த சமூகங்களுக்கு வேலையை ஒதுக்கினார்கள். அனைத்து நாடுகளிலும் ஒரு தொழிலை ஒரு சமூகம் செய்துவிட முடியாது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் போட்டிருக்கும் உடையை நானே உருவாக்கிவிட முடியாது. சமூகத்தில் ஒருவரது தேவையை இன்னொருவர் பூர்த்தி செய்வதற்காக தொழிலை பிரித்து கொள்வது இயல்பு. ஆனால் அந்த தொழிலையே குலத் தொழிலாக மாற்றி ஜாதியாக மாற்றிய பெருமை இந்த சனாதனத்துக்கு உண்டு.

அதனால்தான் சனாதனத்தை நாம் ஏற்கவில்லை. அந்த சனாதனத்தைதான் பெரியார், அண்ணா புரிய வைத்தனர். அம்பேத்கர் தனி மனிதராக முயற்சித்தார்.

அமைப்பு அவருக்கு இல்லை. ஆனால் அம்பேத்கர் எழுத்துகள் இருக்கின்றன. பெரியாருக்கு பின்னால் மிகப் பெரிய நிறுவனம் இருந்ததால் இன்றைக்கு திராவிட இயக்கம் வளர்ந்து சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடிய வல்லமையை பெற்றிருக்கிறது.

வடநாட்டில் அறியாமையால் பேசுகின்றனர். சனாதனத்தை அறிந்த நாங்கள் சொல்கிறோம்.. விரைவில் டெல்லி வரை சனாதன தர்மம் என்றால் என்ன? அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றுதான் அதிலே எங்களுக்கு கூச்ச நாச்சமில்லை என்பதை சொல்ல கூடிய மன திடத்தை திமுகவின் கடைசி தொண்டனும் பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

ஒரு தலைவர் உருவாவதற்கு புறச்சூழல்கள் அமைய வேண்டும். அண்ணா மறைந்த பிறகு அன்றைக்கு ஒரு சூழல் இருந்த காரணத்தால் கலைஞர்  தலைவரானார். உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்து ஒரு நல்ல காரியம் செய்துள்ளனர்.

அதாவது உதயநிதி ஸ்டாலின் என்ற எதிர்காலத் தலைவரை இப்போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் சேர்ந்து செய்திருக்கிறார்கள். அதற்காக நன்றிதான் சொல்ல வேண்டும்.” என்றார் ஆ.ராசா.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பாதுகாப்பு வசதிகள் இல்லாத அரசு ஆதிதிராவிடர் நல விடுதி!

ஐபோன் 15 மாடல்களுக்கு போட்டியாக களமிறங்கும் கூகுள் பிக்சல் 8 சீரிஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share