நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கோஷங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையாற்றினார். அவரது உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நேற்று பிரதமர் மோடி பேசினார்.
தொடந்து இன்று காலை அவை கூடியதும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியதும் குடியரசுத் துணை தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜக்தீப் தங்கார், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேச பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி பேசுவதற்கு எழுந்ததும் பாஜக எம்.பி.க்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.
அதே சமயம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு கூடி விவாதிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
தங்களது இருக்கையை விட்டு எழுந்து வந்து தொடர் கோஷம் எழுப்பினர். இதனால் 2 நிமிடம் மட்டும் பேசிய பிரதமர் மோடி மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தார்.
உடனடியாக மாநிலங்களவை தலைவர், ‘உறுப்பினர்கள் அனைவரும் இருக்கைக்கு சென்று அமருங்கள்’ என்று எச்சரித்து, மீண்டும் பிரதமரை பேச அழைத்தார்.
எனினும் எதிர்க்கட்சிகள் முழக்கமிடுவதை நிறுத்தவில்லை. மோடியும், அதானியும் நண்பர்கள், அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவையின் மைய பகுதியில் கூடி கோஷமிட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
எதிர்க்கட்சியினரின் கோஷம் மற்றும் அமளிக்கு மத்தியில் பிரதமர் உரையாற்றி வருகிறார்.
பிரியா
ஈஷா யோகா சிவராத்திரி: திரவுபதி முர்மு வருகை!
`அப்பா அம்மா செய்த புண்ணியம்`: இளையராஜா பற்றி சூரி