அதிமுக குறித்து பாஜக சொல்வதற்கு ஒன்றுமில்லை : அண்ணாமலை பளீச்

Published On:

| By christopher

அதிமுகவில் இருப்பது உள்கட்சி பிரச்சினை. அவர்கள் தொண்டர்களாக சேர்ந்து முடிவெடுக்கிறார்கள். நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை திருநெல்வேலியில் இன்று (ஜனவரி 24) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர், “திமுகவில் அமைச்சர் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால் மிக முக்கிய தகுதியாக கல் எடுத்து குறிபார்த்து அடிக்க வேண்டும் போல் தெரிகிறது. இன்று காலை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தனது பிஏவை கல் எடுத்து அடிக்க பாய்ந்ததை பார்த்தோம். திமுக அரசு 20 மாதங்களாக செய்வதை இதுதான் காட்டுகிறது.

இடைதேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான்

சுதந்திரத்திற்கு பிறகு எத்தனையோ இடைத்தேர்தல் நடந்துள்ளது. அதில் 80 சதவீதம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றிருக்கிறார்கள். காரணம் அவர்களிடம் இருக்கும் பணபலம், படைபலம் தான்.

ஆனால் பொதுத்தேர்தலில் அதே ஆளுங்கட்சி தோற்றுவிடும். ஏனென்றால் இடைத்தேர்தலில் பணமழையாக கொட்டி ஏதேனும் செய்துவிடுவார்கள் என்பது தான்.

திமுக பயத்தை காட்டுகிறது

இந்த முறை திமுக தான் யோசிக்கின்றனர். போட்டியில் களத்தில் இருக்கக்கூடிய முதல் ஆள் தான் வெற்றி பெற வேண்டும் என்பது கிடையாது.

எதற்காக அவரசம் என்றால் திமுகவை பொறுத்தவரை அவர்களது நிலைமை மிக மோசமாக இருக்கிறது. மக்கள் மன்றத்தில் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

போட்டிப் போட்டுக் கொண்டு வேகவேகமாக அமைச்சர்களை வைத்து குழு அமைப்பது, வேட்பாளர் அறிவிப்பது போன்றவை திமுக கூட்டணியின் பயத்தை தான் காட்டுகிறது.

இந்த ஒரு இடைத்தேர்தலினால் திமுக ஆட்சி மாறப்போகிறதா?. திமுகவின் பெரும்பான்மை எங்காவது மாறப்போகிறதா?. நாடாளுமன்ற தேர்தலுக்கே இன்னும் 14 மாதம் உள்ளது. அதன்பின் நமது பொதுத்தேர்தல் 2026-க்கு இன்னும் பல நாட்கள் உள்ளது. இது ஒரு இடைத்தேர்தல் அவ்வளவு தான்.

we have nothing to speak about admk

அதிமுக குறித்து சொல்ல ஒன்றுமில்லை

இத்தேர்தலில் நாங்கள் யார் என்ற காட்டவேண்டிய நிலைமை பாஜகவுக்கு இல்லை. அதனால் இந்த முறை பாஜகவின் கருத்து என்னவென்றால் ஒரு வேட்பாளர் நியாயமான வேட்பாளர், மக்கள் மன்றத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளர் வேண்டும்.

நமது கூட்டணியில் அதிமுக வலுவான கட்சி. இதற்கு முன் அதிமுகவில் அந்த தொகுதியில் வெற்றிபெற்றவர்கள் அமைச்சர்களாக இருந்துள்ளனர். வெற்றிபெற்றவர்கள் இன்று அங்கு உள்ளனர். இதெல்லாம் நாம் பார்க்கிறோம்.

புதிதாக ஆராய ஒன்றுமில்லை. சற்று பொறுமையாக இருங்கள். எங்கள் கட்சி மூத்த தலைவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

31-ம் தேதிக்கு இன்னும் நாள் உள்ளது. ஒரு நல்ல முடிவு, முக்கிய முடிவு என்னவென்றால் திமுகவை எதிர்த்து நமது வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்பது தான் நோக்கமே தவிர இது பலப்பரீட்சை அல்ல.

அதிமுகவில் இருப்பது உள்கட்சி பிரச்சினை. அவர்கள் தொண்டர்களாக சேர்ந்து முடிவெடுக்கிறார்கள். நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

”வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்” – பன்னீர் பேட்டி

நியூசிலாந்து ஒயிட்வாஷ் : முதலிடத்துக்கு முன்னேறியது இந்தியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share