தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு நாளையொட்டி மலர் அஞ்சலி செலுத்த பரமக்குடி வந்த எங்களுக்கு ராமநாதபுரம் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்காமல் அலட்சிய போக்குடன் செயல்பட்டதாக செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு தினத்தையொட்டி இன்று (செப்டம்பர் 11) அவரது நினைவிடத்தில் ஆளும் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது.
அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலைவர் செல்வப் பெருந்தகை தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
முதல்வருக்கு நன்றி!
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சி சார்பாக தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினோம். காங்கிரஸ் ஆட்சியில் தான் இமானுவேல் சேகரனாரை நினைவு கூறும் விதமாக தபால் தலை வெளியிடப்பட்டது. அதே போன்று எங்களது கோரிக்கையை ஏற்று இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் கட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.
எங்களுக்கே பாதுகாப்பு இல்லை!
தொடர்ந்து அவர் பேசுகையில், “எங்களது தலைவர்களுக்கு ராமநாதபுரம் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிப்பதில்லை. ஏன் இவ்வளவு அலட்சிய போக்குடன் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அதற்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். மதுரை, சிவகங்கையில் உரிய பாதுகாப்புடன் வந்த எங்களுக்கு, ராமநாதபுரத்தில் போலீசார் தரவில்லை. ஏதோ அநாதைகள் வந்து செல்வது போன்றா நாங்கள் வந்து செல்ல முடியும்? கட்டுப்பாட்டுடன் வரும் எங்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் வேறு யாருக்கு பாதுகாப்பு வழங்குவீர்கள்? இனியாவது எந்த பிரச்சனையும் ஏற்படாத அளவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.”
7 ஆயிரம் போலீசார் குவிப்பு!
முன்னதாக இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டிராமாநாதபுரம் மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மேற்பார்வையில் தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் தலைமையில் 3 டி.ஐ.ஜி. 19 எஸ்.பி. 61 டி.எஸ்.பி. உள்பட சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிடக்கத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மெஸ்சி வளர்க்கும் நாயின் விலை எவ்வளவு தெரியுமா? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்!
”விவாகரத்து குறித்து என்னிடம் கேட்கவில்லை”: ஜெயம் ரவி மனைவி வேதனை!