விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 8) உத்தரவிட்டுள்ளது.
2016இல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக விமர்சித்ததாக அப்போதைய எதிர்கட்சித் தலைவர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதாவை அவதூறாக விமர்சித்ததாக, அப்போதைய எதிர்கட்சித் தலைவர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, சென்னை எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக கடந்த 2021ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற சிறப்பு நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அவதூறு வழக்குகளை வாபஸ் பெற உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதிக் கோரி நகர குற்றவியல் வழக்கறிஞர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

விஜயகாந்துக்கு பாராட்டுவிழா
அதே வேளையில் சென்னையில் இன்று படவிழாவின்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் பேசுகையில், ”நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் விஜயகாந்தின் பங்களிப்பு மிகப்பெரியது. நடிகர் சங்கத்தின் பத்திரத்தை அவர் தான் மீட்டு கொடுத்தார். அவரின் உழைப்புதான் அந்த கட்டடம்.
எனவே விஜயகாந்தின் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் வகையில் நடிகர் சங்கம் கட்டடம் முடிக்கப்பட்டதும் அங்கு அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
அவதூறு வழக்கு வாபஸ் பெற்றது விஜயகாந்தின் ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில், அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்ற விஷாலின் அறிவிப்பு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆன்லைன் ரம்மி தடை மசோதா: மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர்
டிஜிட்டல் திண்ணை: அதுவரை காத்திருப்போம்… அண்ணாமலைக்கு எடப்பாடி கெடு!