ஜாமீனை நீட்டிக்க கோரிய கெஜ்ரிவாலின் மனுவை தலைமை நீதிபதி விசாரிப்பார் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படடார்.
இந்நிலையில் ஜாமீன் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு மே 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
21 நாள் ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் ஜூன் 2ஆம் தேதி விசாரணைக்கு சரணடைய வேண்டும் என்று தெரிவித்து, தேர்தல் முடிவுக்கு அடுத்த நாள் அதாவது ஜூன் 5ஆம் தேதி வரை ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
இந்நிலையில், கெஜ்ரிவால் சார்பில் 7 நாட்களுக்கு ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், பெட்- சிடி உள்ளிட்ட முக்கிய பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் ஒரு வாரம் ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக பஞ்சாபில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ஒரு மாதத்தில் 7 கிலோ குறைந்துள்ளேன். எந்த காரணமும் இன்றி 7 கிலோ குறைந்தால் அது தீவிர மருத்துவ பிரச்சினையாகதான் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். முக்கிய மருத்துவ பரிசோதனை செய்ய சொல்லியிருக்கின்றனர்.
இதை செய்வதற்கு 7 நாட்கள் வரை தேவைப்படும். அதனால் ஜாமீன் நீட்டிக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளேன்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று (மே 28) காலை கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ஜாமீனை நீட்டிக்க கோரிய கெஜ்ரிவாலின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கை வேண்டும் என்று முறையிட்டார்.
இதை விசாரித்த நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் விஸ்வநாதன், “கெஜ்ரிவால் வழக்கு மே 17ஆம் தேதி விசாரிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. தகுந்த உத்தரவுக்காக தலைமை நீதிபதி முன் இவ்வழக்கு விசாரிக்கப்படும்” என்று கூறி அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எப்படி இருந்த துணை வேந்தர்கள் இப்படியாகி விட்டார்களே!
ரூ.54 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை… வெள்ளி விலை எவ்வளவு தெரியுமா?