அதிமுக செய்ததைதான் நாங்கள் செய்கிறோம்: துரைமுருகன்

அரசியல்

ஆளுநருக்கு எதிராக இன்று (ஏப்ரல் 10)  முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டுவந்தார்.  இந்தத் தீர்மானம் கொண்டுவருவதற்கு முன்னதாக  அவை முன்னவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

அதாவது, “சட்டமன்ற பேரவை விதி 92/(vii)-ல் அடங்கியுள்ள conduct of any governor எனும் பதம், use the governors name for the purpose of influencing a debate எனும் பதம் மற்றும் விதி 287ல் அடங்கியுள்ள Provided however that they above provisions are not be invoked to suspend rule 92(vii) எனும் பதம் ஆகியவற்றின் பயன்பாடுகளை நிறுத்தி வைத்து இன்றைய நிகழ்ச்சி நிரலில் இனம் 4ல் குறிப்பிடப்பட்டுள்ள அரசினர் தனி தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று முன்மொழிந்தார் துரைமுருகன். 

அதாவது ஆளுநருக்கு என்று சட்டமன்றத்தில் இருக்கும் பிரத்யேகங்களை  நிறுத்தி வைப்பதாக தீர்மானம் நிறைவேற்றி… அதற்குப் பிறகு ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர்  முன் மொழிந்தார்.   

இந்தத் தீர்மானத்துக்கு முன்பே அதிமுக வெளிநடப்பு செய்துவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தில் பேசிய அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன்,

 “முதல்வர் கொண்டுவந்த இந்த தீர்மானத்தை வரவேற்று திமுக சார்பில் சில கருத்துகளை தெரிவிக்க விரும்புகிறேன். இந்தத் தீர்மானத்தை சரியான நேரத்தில் முதல்வர் கொண்டு வந்திருக்கிறார்.

இதில் கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் நாகரிகத்தோடு நியாயத்தை எடுத்துரைக்கிற வகையில் காழ்ப்புணர்ச்சி சிறிதும் இன்றி வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருப்பதை பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஏதோ ஆளுநர் எதிர்ப்பு தீர்மானம் என்று தகவல் வந்ததும் எதிர்க்கட்சிகள் துள்ளிக்குதித்து இது பஞ்சமா பாதகம் என்பதுபோல சொன்னார்கள்.

போகிறபோது, ‘நீங்கள் சட்டமன்ற விதிகளை எல்லாம் தளர்த்தி அல்லவா கொண்டு வருகிறீர்கள்?’ என்று கேட்டனர்.

சட்டமன்ற விதிகளை தளர்த்துவது எப்படி என்பதை  கற்றுக் கொடுத்ததே அவர்கள்தான். இதே சட்டமன்ற விதிகளை தளர்த்திதான் சென்னாரெட்டி மீது பாய்ந்தார்கள். அதே சட்டமன்ற விதிகளை நாம் தளர்த்தும்போது பத்தினிகள் ஆகிவிட்டார்கள். சரி அவர்கள் போகட்டும்” என்று குறிப்பிட்டார் துரைமுருகன்.

வேந்தன்

‘கை கட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்’: ஆளுநருக்கு எதிராக முதல்வர் தனி தீர்மானம்!

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: முன்பே அதிமுக வெளிநடப்பு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “அதிமுக செய்ததைதான் நாங்கள் செய்கிறோம்: துரைமுருகன்

  1. ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் என்றால் எடப்பாடிக்கு ஏன் உதைக்கிறது? இவன் அடுத்த தேர்தலில் பெரிய அளவில் ஓட்டு வங்கியை இழக்கப்போவதற்கு முன்அறிகுறி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *