”ரஜினி அயோத்திக்கு போனது வருத்தமில்ல… ஆனா” : பா.ரஞ்சித் விமர்சனம்!

Published On:

| By christopher

We are afraid of India's position in 5 or 10 years : Pa.Ranjith

We are afraid of India’s position in 5 or 10 years : Pa.Ranjith

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று (ஜனவரி 22) மிக கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நாட்டில் உள்ள முக்கிய திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

அதேவேளையில் ஜெயக்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன் நடித்த ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது.

ராமர் கோயிலுக்கு பின்னால் மத அரசியல்!

அதில் கலந்துகொண்டு இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், ”இன்று ரொம்பவும் முக்கியமான நாள். வீட்டிற்கு சென்று இன்று கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் எல்லாம் தீவிரவாதி ஆகிவிடுவோம்.

உண்மையில் தீவிரமான காலத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் நாம் இருக்கப் போகிறோம் என்ற பயம் நமக்கு வருகிறது.

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு பின்னால் உள்ள மத அரசியலை நாம் கவனிக்க வேண்டும். மதசார்பற்ற இந்தியா இன்று எதை நோக்கி நகர்கிறது என்பது கேள்வி குறியாகியுள்ளது.

பராசக்தி வசனத்தை தான் சொல்ல விரும்புகிறேன். “கோயில் கூடாது என்று சொல்லவில்லை, அது கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது” என்ற கவலை தான் இப்போது இருக்கிறது.

இந்தியாவில் இவ்வளவு பெரிய கோயில் திறக்கப்படுவதை கடவுள் நம்பிக்கையாக மட்டும் பார்த்தால் சிக்கல் இல்லை. ஆனால் அதை அரசியலாக பார்ப்பது தான் சிக்கலாக உள்ளது.

இத்தகைய சூழலில் நமது மனங்களை பண்படுத்தவும், மூளையில் ஏற்றி வைத்துள்ள பிற்போக்குத்தனத்தையும் மதவாதத்தையும் அழிப்பதற்கும் நம்மிடம் இருக்கும் ‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்.

மக்களை எளிதில் அடையும் ஆயுதமாக ‘கலை’ இருப்பதால், மக்கள் மனங்களை சரி செய்வதற்கான சக்தி இதற்கு உள்ளது என நான் நம்புகிறேன்.

ப்ளூ ஸ்டார் படக்குழுவினருக்கு இந்த நாள் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த நாளில் இருந்து புதிய வரலாறு ஆரம்பிக்கிறது. அந்த வரலாற்றில் நாம் எங்கு இருக்கப் போகிறோம் என்ற புரிதல் நமக்கு வேண்டும். ப்ளூ ஸ்டார் என்ற பெயரே அரசியல்தான், அந்த நீல நட்சத்திரம் நம்மை சரியாக வழி நடத்தும் என நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

ரஜினி போனது வருத்தமில்ல… ஆனா!

இதனை தொடர்ந்து ரஜினி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு சென்றது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பா. ரஞ்சித், ”ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு ரஜினி சென்றது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், ’500 ஆண்டு கால பிரச்னை தற்போது முடிவிற்கு வந்துவிட்டது’ என்று அவர் சொன்னார். அந்த பிரச்னைக்கு பின்னால் உள்ள அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டும். தற்போது ரஜினி அயோத்திக்கு சென்றது சரியா? தவறா? என்பதை விட எனக்கு அவர் கூறிய கருத்தின் மீது விமர்சனம் உள்ளது” என்று பா. ரஞ்சித் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

கோயில் வாழ்நாள் அறங்காவலர் சஸ்பெண்ட் வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு!

வடிவேலு – பகத் நடிக்கும் படத்தின் டைட்டில் இதோ!

ரெண்டு போட்டியில கோலி ஆட மாட்டாரு… அதைப்பத்தி எதுவும் கேட்காதீங்க… பிசிசிஐ கோரிக்கை!

We are afraid of India’s position in 5 or 10 years : Pa.Ranjith

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share