வயநாடு இடைத் தேர்தல்: பிரியங்கா காந்தி முன்னிலை!

கேரள மாநிலம் வயநாடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா  காந்தி, வயநாடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக களமிறங்கினார். இவரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் சத்யன் மோக்கரி,  பாஜக சார்பில் நவ்யா  உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இன்று (நவம்பர் 23) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா முன்னிலை பெற்றார்.

தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட அதிகாரபூர்வ விவரங்களின் படி காலை 9.15 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி 13 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இவரையடுத்து இடது சாரி வேட்பாளர் சத்யன் மோக்கரி      3 ஆயிரம் வாக்குகளே பெற்று சுமார் 10 ஆயிரம் வாக்குகள் பின்னால் இருக்கிறார்.

செய்தி சேனல்கள் கொடுக்கும்  விவரங்களின் அடிப்படையில்  முதல் ஒரு மணி நேர வாக்கு எண்ணிக்கையில் பிரியங்கா காந்தி 35 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.

தொடர்ந்து பிரியங்கா காந்தி வேகமாக முன்னிலை பெற்று வருகிறார்.  பிரியங்கா காந்தியின் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத் தக்கது.

ராகுல் காந்தி வயநாடு, ரேபரேலி என இரு தொகுதிகளிலும் 2024 தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், அவர் ரேபரேலியை வைத்துக் கொண்டு வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரியங்கா காந்தியை வயநாட்டில் களமிறக்கியது காங்கிரஸ் கட்சி என்பது குறிப்பிடத் தக்கது.

வேந்தன்

மகாராஷ்டிரா தேர்தல் முன்னிலை நிலவரம்… 100 இடங்களைத் தாண்டிய என்டிஏ கூட்டணி!

ஜார்க்கண்ட் எலக்‌ஷன் ரிசல்ட்… இந்தியா கூட்டணிக்கு அதிர்ச்சி.. என்டிஏ முன்னிலை!

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts