உதயநிதி பிறந்தநாளில் வி.பி.சிங் சிலை திறப்பு விழா… தலைவர்களுக்கு அழைப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த வி.பி.சிங் சிலையை அமைச்சர் உதயநிதி பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அளித்திடும் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தி பரந்தஅளவில் பாராட்டுக்களைப் பெற்றவர்தான் மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங்.

பிரயாக்ராஜ் என்று தற்போது அழைக்கப்படும் அன்றைய அலகாபாத் நகரில் 1931 ஜூன் 25 இல் பிறந்த இவரது இயற்பெயர் விஸ்வநாத் பிரதாப் சிங். அரசியலில் பிரகாசமானபோது பெயரைச் சுருக்கி விபி சிங் என பெயரை மாற்றிக்கொண்டார்.

அதன் பிறகு எம்.பி., வெளியுறவுத்துறை அமைச்சர், இராணுவத் துறை, நிதித்துறை அமைச்சர், உத்தரபிரதேச முதல்வர், இந்திய பிரதமர் என பல பதவிகளை வகித்து வந்தவர்.

புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி 2008 நவம்பர் 27ஆம் தேதி காலமானார்.

இவரது சிலையை சென்னை மெரினா கடற்கரை சாலையில் கண்ணகி சிலை எதிரில் பிரெசிடன்சி கல்லூரி வளாகத்தில் விளையாட்டுத்துறை அமைச்சரும் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளான நவம்பர் 27 இல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இந்த விழாவில் ’இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு கொடுத்து வருகிறது திமுக தலைமை.

அதன்படி உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ்க்கு பாராளுமன்ற குழு தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டிஆர் பாலு இன்று டெல்லியில் நேரடியாக சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனை ஜாமீன்!

திருச்செந்தூர் முருகன் கோவில் தரிசன கட்டண உயர்வா? – கோவில் நிர்வாகம் விளக்கம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts