vp duraisamy says alliance

அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கவே பேசி வருகிறோம்: விபி துரைசாமி

அரசியல்

அதிமுக, பாஜக கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதற்காக தான் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

என்டிஏ கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதை தொடர்ந்து கட்சி தலைமையால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.

டெல்லியில் நேற்று மதியம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை இன்று சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி விவகாரம் தொடர்பாக டெல்லியில் பாஜக தலைமையிடம் அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருவதால் இன்று நடைபெறவிருந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் தலைமையில் பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி கமலாலயத்திற்கு வந்தார்.

அவரிடம் செய்தியாளர்கள் அதிமுக பாஜக கூட்டணி தொடருமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வி.பி.துரைசாமி, “நல்ல முடிவு கிடைக்கும். கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதற்காக  தான் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் சாதம்

ஆசிய போட்டிகளில் அதிரடி…ஜெய்ஸ்வால் புதிய சாதனை!

+1
0
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

2 thoughts on “அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கவே பேசி வருகிறோம்: விபி துரைசாமி

  1. ஆமாங்க, பல்லக்கு தூக்க ஆள் வேணும்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *