தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று (டிசம்பர் 4)காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில், மொத்தம் 1,349 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். 13,638 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஓட்டுப்பதிவு மாலை 5.30 மணி வரை நடக்கிறது.
டெல்லி மாநகராட்சி தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது டெல்லி மாநகராட்சி பகுதிகளை சுற்றி 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 7 ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்தாலும் மாநகராட்சி தேர்தலை பொறுத்தமட்டில் பாஜகவின் கை ஓங்கி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் டெல்லி மாநகராட்சியை பாஜக கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திக் திக் நொடிகள்..மெஸ்ஸி மேஜிக்கால் வாகைசூடிய அர்ஜென்டினா!
மகா தீபத் திருவிழா: களைகட்டும் திருவண்ணாமலை!