டெல்லி சட்டமன்ற தேர்தல்!
டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் இன்று (பிப்ரவரி 5) ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். டெல்லி முழுவதும் 13,766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
220 கம்பெனி துணை ராணுவப்படை, 19,000 ஊர்க்காவல் படை, 35,626 டெல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியாகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்!
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவையடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஜனவரி 21-ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், பிப்ரவரி 3-ஆம் தேதியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இங்கு மொத்தம் 2,27,546 வாக்காளர்கள் உள்ளனர். வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 1,195 அலுவலர்களும், 2,675 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 5.30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அப்போது வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் 50 மாதிரி ஓட்டுக்கள் போட்டு சோதனை நடத்தப்பட்டது.
தொடந்து காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கடும் பனியையும் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறுகிறது. voting begins in erode