ஆதார் விவகாரம்: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!
வாக்காளர்கள் ஆதார் அட்டையைக் காண்பித்து வாக்களிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 27) காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தேர்தல் விதிமுறைகளின் படி வரிசையில் நின்று வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சில வாக்குச்சாவடிகளில் ஆதார் அட்டையைக் காண்பித்தால் வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்ற புகார்கள் எழுந்தன.
இதற்குப் பதிலளித்த தேர்தல் அதிகாரி சிவக்குமார், ”வாக்காளர்களின் ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்காளர்கள் ஆதார் அட்டையைக் காண்பித்து வாக்களிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலைப் பின்பற்றி வாக்களிக்க வாக்காளர்களை அனுமதிக்கவும் தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஈரோடு தேர்தல் நிலவரங்களைக் வெப் கேமரா மூலம் கண்காணித்து வருகிறார்.
மோனிஷா
1 மணி நிலவரம்: ஆண்களை காட்டிலும் பெண்கள் வாக்குகள் அதிகம்!
கௌதம் மேனனின் ‘பத்து தல’ லுக்: யாரை நினைவூட்டுகிறது?