அனந்த் குப்தா Voter list fraud
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிப்ரவரி 27 அன்று, 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாகப் போலி வாக்காளர்கள் “வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்” என்று கூறிப் பரபரப்பை ஏற்படுத்தினார். மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடியும் தில்லியில் ஆம் ஆத்மியும் முன்பு இதே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தன. Voter list fraud
இந்தியாவின் வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் மோசடி நடந்துள்ளது என்ற இந்தக் கூற்று ஒருமித்த வகையில் எதிர்க்கட்சிகளுக்குள் உருவாகிவருகிறது.
வாக்காளர் பட்டியலில் நடந்ததாகக் கூறப்படும் இந்த மோசடி, ஆளும் பாரதிய ஜனதா கட்சி தேர்தல்களைத் திசைதிருப்ப உதவுகிறது என்று இந்தக் கட்சிகளின் தலைவர்கள் நம்மிடம் தெரிவித்தனர். இதற்கு முன்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்து பாஜக பயனடைவதாகக் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியிருந்தனர்.

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியைச் சேர்ந்த 129 வாக்காளர்களின் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டது. அவர்களின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்கள் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் கூறும் EPIC எண்களின் நகல், அடுத்த ஆண்டு பாஜகவால் மாநிலத்திற்குள் “போலி வாக்காளர்கள்” கொண்டு வரப்படுவதற்கான கருவியாகச் செயல்படும் என்று திருணமூல் காங்கிரஸ் கூறியது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், நகலில் ஏற்பட்ட பிழையை ஒப்புக்கொண்டது. ஆனால், வாக்காளர்கள் தங்கள் EPIC எண்களைப் பொருட்படுத்தாமல் தங்கள் சொந்த தொகுதிகளைத் தவிர வேறு தொகுதிகளில் வாக்களிக்க முடியாது என்று கூறியது. மூன்று மாதங்களில் நகல் பிரச்சினையைச் சரிசெய்வதாக உறுதியளித்தது. Voter list fraud
ஒரே மாதிரியான EPIC எண்ணைக் கொண்ட வெவ்வேறு நபர்களின் புகைப்படங்களில் உள்ள முரண்பாடு, வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வரும்போது தேர்தலில் பங்கேற்கும் உரிமையைப் பறிக்கக்கூடும் என்று திருணமூல் காங்கிரஸ் பதிலளித்தது. அனைத்து நகல்களையும் நீக்குவதாக ஆணையம் கூறியது. Voter list fraud
வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்கும் EVM மோசடி குறித்த முந்தைய கூற்றுகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளைத் திருணமூல் கட்சியின் புள்ளிவிவரப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவர் பிரவீண் சக்கரவர்த்தி சுட்டிக்காட்டினார். Voter list fraud
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் எம்.பி.யுமான சஞ்சய் சிங், வாக்காளர் பட்டியல் மோசடி, பாஜக ஆட்சி பயன்படுத்தியதாகக் கூறப்படும் பல தந்திரங்களில் ஒன்று எனக் கூறினார்.
கடந்த நவம்பரில் மகாராஷ்டிரச் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, வாக்காளர் பட்டியல் திணிப்பு குறித்து காங்கிரஸ் குற்றம் சாட்டியது. தேர்தல் மோசடிக் குற்றச்சாட்டுகளை ஆராயத் தலைவர்களையும் நிபுணர்களையும் கொண்ட செயல் குழுவை கட்சி அமைத்தது.

மக்களவைத் தேர்தல்களுக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கும் இடையிலான ஆறு மாதங்களில் மகாராஷ்டிர வாக்காளர் பட்டியலில் 39 லட்சம் கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளைப் பயன்படுத்தி இந்தக் குழு குற்றம் சாட்டியது. Voter list fraud
அந்தக் குழுவின் எட்டு உறுப்பினர்களில் ஒருவரான சக்ரவர்த்தி, மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் 30 முதல் 50 வரையிலான வாக்காளர் பட்டியல்களில் “சந்தேகத்திற்குரிய ஒன்றை” கண்டறிந்ததாக ஸ்க்ரோலிடம் தெரிவித்தார்.
பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் மோசடியாக நீக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியும் பலமுறை புகார் அளித்தது. இதுபோன்ற தந்திரோபாயங்களில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தாதது பாஜகவுக்கு “5% – 7% கூடுதல் வாக்குகளை” அளிக்கக்கூடும் என்றார் சஞ்சய் சிங்.
“நாங்கள் இதை மிக ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சில சேதங்களைக் கட்டுப்படுத்தினோம் என்பது உண்மைதான், ஆனால் அதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை,” என்று அவர் கூறினார். “இருமுனைப் போட்டிகளாக இருக்கும் மாநிலத் தேர்தல்களில், வெறும் 1% வாக்கு வித்தியாசத்தில் அனைத்து இடங்களையும் இழக்க நேரிடும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். Voter list fraud
டெல்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களைப் பெற்றது, இது பாஜக பெற்ற 48இல் பாதிக்கும் குறைவானது. இருப்பினும், இரு கட்சிகளின் வாக்குகளுக்கிடையிலான வித்தியாசம் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.
உத்தரப் பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சியும் கவலை கொண்டுள்ளது. “வாக்காளர் பட்டியலில் உள்ள சிக்கல்களைக் கண்டறிவது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமை” என்று கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹைதர் கூறினார். “அவர்கள் இன்னும் எங்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. போலி வாக்களிப்புக்கு ஆதரவாக நிர்வாகம் ஆளும் கட்சியுடன் கைகோர்த்து செயல்படுகிறது.”
திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், பிற மாநிலங்களிலிருந்து பாஜகவால் போலி வாக்காளர்கள் கொண்டுவரப்படுவது குறித்த மம்தா பானர்ஜியின் கவலைகளை எதிரொலித்தார். “தேர்தல் எங்கு நடந்தாலும் மக்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்,” என்று அவர் கூறினார். “அதை நிறுத்த வேண்டும். இது தேர்தல் முடிவுகளை பாஜகவுக்குச் சாதகமாக ஆக்குகிறது.”
இருப்பினும், வலுவான தொண்டர் பலம் காரணமாக, வாக்காளர் பட்டியல் மோசடி விஷயத்தில் மற்ற எதிர்க்கட்சிகளின் அச்சங்கள் திமுகவுக்கு இல்லை. அடிமட்டத்தில் கட்சி ஊழியர்களின் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் போலி வாக்காளர்களை விலக்கி வைக்கும் என்று தனது கட்சி நம்பிக்கை கொண்டுள்ளதாக வில்சன் ஸ்க்ரோலிடம் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை எதிர்ப்பதற்குத் தொண்டர்கள் பலம் அவசியம் என்றும் சமாஜ்வாதி கட்சி கூறியது. “உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு சாவடியிலும், ஒவ்வொரு கிராமத்திலும் எங்களுக்கு ஒரு சுறுசுறுப்பான கட்சி ஊழியர் இருக்கிறார்,” என்று அப்பாஸ் ஹைதர் கூறினார். “எங்கள் நெட்வொர்க் அனைத்து வகையான மோசடிகளையும் அம்பலப்படுத்தப் பாடுபடுகிறது. 2027 தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும்போது, எந்த வாக்காளர்கள் விடுபட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டி அதைச் சரிசெய்வோம்.”
தாங்கள் கண்டுபிடித்துள்ள மோசடியை எதிர்கொள்ளத் தங்களது அடிமட்டத் தொண்டர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று திருணமூல் கட்சி அறிவித்தது. போலி வாக்காளர்களை அடையாளம் காண கட்சி வீடு வீடாக கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது.
கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு Voter list fraud
தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களை பாஜக கைப்பற்றியதாகக் கூறப்படுவது குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. வாக்காளர் பட்டியல் மோசடிக் குற்றச்சாட்டுகளில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன என்பதையே இது குறிக்கிறது. இந்த விவகாரத்தில் அவர்கள் “தொழில்நுட்ப நிபுணத்துவத்தை” ஒன்றிணைத்து, தகவல்களைப் பரிமாறிக் கொண்டு, தங்களுக்குள் ஒருங்கிணைப்பு செய்துவருகிறார்கள்.
மகாராஷ்டிரத்தில் கூடுதல் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக பிப்ரவரியில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கூறியபோது, சிவசேனாவின் சஞ்சய் ராவத் (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே (சரத்சந்திர பவார்) ஆகியோர் உடன் இருந்தார்கள்.

வாக்காளர் பட்டியல்கள் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 30-50 சட்டமன்றத் தொகுதிகளை அடையாளம் காண காங்கிரஸ் மகாராஷ்டிரத்தில் இரண்டு கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட்டுவருவதாக சக்ரவர்த்தி உறுதிப்படுத்தினார்.
“இதை மக்களிடம் எடுத்துச் செல்ல நாங்கள் அரசியல் பிரச்சாரத்தை மேற்கொள்ளப் போகிறோம்,” என்று அவர் கூறினார். “சிவசேனா (UBT), என்சிபி (SP) ஆகியவற்றுடன் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம், ஏனெனில் இந்தத் தொகுதிகளில் அவர்கள் இழந்த சில தொகுதிகளும் அடங்கும்.”
இந்தப் பிரச்சினையில் எல்லா மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன. “நாங்கள் எங்கள் கூட்டாளியான ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்பில் இருக்கிறோம்,” என்று திருணமூல் கட்சியின் மாநிலங்கலவை எம்.பி. சகரிகா கோஷ் கூறினார். “மகாராஷ்டிரம், ஹரியானா, தில்லி ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடந்ததாக நாங்கள் நம்புகிறோம்.”
மார்ச் 10 அன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது, ”பெரிய அளவில்” இதை எழுப்ப தனது கட்சி மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்று கோஷ் கூறினார். “நாங்கள் இதை தேசிய அளவில் எடுத்துச் செல்லப் போகிறோம்,” என்றார்.
காங்கிரஸின் கருத்தும் இதுதான். “எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இவ்விஷயத்தில் செயல்படும்” என்று சக்ரவர்த்தி கூறினார். “சுதந்திரமான, நியாயமான ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்வது பொய். இந்தியா இப்போது அப்படி இல்லை” என்றார் அவர்.
மக்களிடம் பேசுதல் Voter list fraud
மகாராஷ்டிரத் தேர்தல் முடிவடைந்த பின்னர் மகா விகாஸ் அகாடி தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், வங்காளத் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கும் முன்னதாகவே வாக்காளர் பட்டியலில் மோசடி செய்யப்படலாம் என்று திருணமூல் காங்கிரஸ் குரலெழுப்பியுள்ளது. மற்ற இடங்களில் எதிர்க்கட்சிகளை வெல்ல பாஜக கடைப்பிடித்ததாகக் கூறப்படும் தந்திரோபாயங்களை எதிர்கொள்ள அது தயார்நிலையில் இருப்பதையே இது காட்டுகிறது.
நாடு முழுவதும் வரவிருக்கும் தேர்தல்களில் அரசியல் சவால்கள் அதிகரித்து வருவதால், வாக்காளர் பட்டியலின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பதும் தேர்தல் ஆணையத்தின் நடத்தையும் சூடான பிரச்சினைகளாகவே இருக்கும்.
நாடாளுமன்றத்தில் இது குறித்துப் போராடுவதால் பெரிதாகப் பலன் இருக்காது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. “நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் மூலம் இது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்” என்று ஆம் ஆத்மி கட்சியின் சிங் கூறினார்.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட 2024 மக்களவைத் தேர்தல் தரவுகளில் உள்ள முரண்பாடுகள் குறித்துப் பேசிவரும் அரசியல் பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர், குடிமக்கள் தலைமையிலான பிரச்சாரங்களும் உள்ளூர்ப் போராட்டங்களும் “தவறான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட” அரசியல்வாதிகளை அவமானப்படுத்துவதற்கான சிறந்த வழி என்று கூறினார். Voter list fraud
“அரசியல் கட்சிகள் மீது எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அவர்கள் மிகவும் முன்னதாகவே செயல்பட்டிருக்க வேண்டும். நமது ஜனநாயகத்தின் பாதுகாப்பை அவர்களிடம் ஒப்படைக்க முடியாது” என்கிறார் அவர். Voter list fraud
அரசியல் கட்சிகளோ, குடிமைச் சமூக அமைப்புகளோ, யாராக இருந்தாலும் இந்தப் பிரச்சினையை மக்களிடம் எடுத்துச்செல்வதில்தான் இதற்கான பலன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. தற்போதைக்கு இந்தப் பிரச்சினை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் புள்ளியாக மாறியுள்ளது என்பதும் கட்சிகள் முன்பைவிடவும் எச்சரிக்கையாக இருக்கின்றன என்பதும் நம்பிக்கை தரும் அம்சங்கள். Voter list fraud opposition
தமிழில்: தேவா