விஜய்யின் தவெக மாநாடு வெற்றிபெற விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பல ஆயிரக்கணக்கானோர் வந்து கொண்டிருக்கின்றனர். 2 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில், காமராஜர், பெரியார், அம்பேத்கர், தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியர், அஞ்சலை அம்மாள், வேலுநாச்சியார் ஆகியோரின் கட்டவுட்டுகள் வைக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்தது.
இதனை சுட்டிக்காட்டி விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தவெக மாநாட்டு மேடையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள முகப்புகளில் தமிழ்நாடு அரசியலின் கொள்கை ஆசான் தந்தை பெரியார், இந்திய அரசியலின் அடையாளம் புரட்சியாளர் அம்பேத்கர், மக்கள் தலைவர் பெருந்தலைவர் காமராசர், அடிமைத்தனத்தை எதிர்த்த வீர பெண் களப்போராளிகள் வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் படங்களை வைத்து தமிழ் மக்களின் பொது மனநிலையையும், உறுதியான இலட்சிய அரசியலையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
தொடர்ந்து, தனது அரசியல் பயணத்தை இதன் வழி அமைத்துக் கொள்வதன் மூலம் கொள்கை ரீதியான அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றிடவும், அவரது இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும் எனவும் விஜயை வாழ்த்தி வரவேற்கிறேன்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (அக்டோபர் 27) பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
விஜய் மாநாட்டுக்கு புறப்பட்ட இளைஞர் விபத்தில் பலி!
பிக் பாஸ் 8 ; வெளியேறினார் தர்ஷா – ஹவுஸ்மேட்ஸை விளாசிய சேதுபதி