அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளரும் தற்போதைய விருதுநகர் சிட்டிங் எம்பியுமான மாணிக் தாகூர் மீண்டும் விருதுநகர் தொகுதியை எளிதாக பெறுவார் என்று ஒரு பேச்சு இருந்தது.
ஆனால் விருதுநகர் தொகுதியை தக்க வைப்பதற்கு டெல்லி மேலிடத்திடம் கடுமையாக போராடி வருகிறார் மாணிக்கம் தாகூர்.
தெலுங்கானா பொறுப்பாளராக இருந்தபோது மாணிக் தாகூர் பற்றி ராகுல் காந்திக்கு சில புகார்கள் சென்றன.
அந்த அடிப்படையில் மாணிக் தாகூருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று அவரது உட்கட்சி எதிரிகள் டெல்லியில் கடுமையாக காய் நகர்த்தி வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே சி வேணுகோபாலிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கு மூலமாக மீண்டும் விருதுநகர் தொகுதியை பெறுவதற்கு சில நாட்களாக போராடி வருகிறார் மாணிக் தாகூர்.
இதே விருதுநகர் தொகுதிக்கு சிந்துஜா என்ற பெண் விருப்ப மனு கொடுத்திருப்பதும் அவர் மாநில தலைவர் செல்வப் பெருந்தகையின் தீவிர ஆதரவாளர் என்பதும் விருதுநகர் காங்கிரஸ் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
வேந்தன்
சிவகங்கை: சிதம்பரத்தை சீண்டிய திருநாவுக்கரசர்
திருவள்ளூர்: ஜெயக்குமாரா? சசிகாந்த் செந்திலா?