விருதுநகர் : படையெடுக்கும் காங்கிரஸ், தேமுதிக கார்கள்… கவுண்டிங் சென்டரில் பதற்றம்!

Published On:

| By christopher

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மாணிக்கம் தாகூர் மற்றும் விஜய பிரபாகர் இடையே இழுபறி நிலவி வரும் நிலையில் வாக்கு எண்ணும் மையத்தை நோக்கி தேமுதிக – காங்கிரஸ் நிர்வாகிகள் கார்கள் குவிந்து வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு துவங்கியது.

தமிழ்நாட்டில் தற்போது 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளது. எனினும் விருதுநகர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணில் காங்கிரஸ் சார்பில் போட்டியில் மாணிக்கம் தாகூர் மற்றும் மறைந்த நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தபால் வாக்குகள் எண்ணிக்கையின் போது மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்த நிலையில், அதன் பின்னர் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணிய போது விஜய பிரபாகரன் முன்னிலை இடத்தை பிடித்தார்.

மாணித்தாகூர் தற்போது மீண்டும் முன்னிலை வகிக்கும் நிலையில், இருவருக்கும் இடையே விருதுநகர் தொகுதியில் சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

எனவே இந்த தொகுதியில் வெற்றி பெறுவார்கள் யார் என்று கூற முடியாத நிலையில், காங்கிரஸ் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கார்களில் வாக்கு எண்ணும் மையத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் விருதுநகரில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிறையில் இருந்தபடி முன்னாள் முதல்வரை தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர்!

அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியில் பாஜக தோல்வி முகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share