யு.கே.ஜி. சிறுமிக்கு பாலியல் தொல்லை- சிக்கிய திமுக கவுன்சிலர்: ஸ்டாலின் ஆவேசம்!

அரசியல்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே அவமான சின்னமாக கருதுகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் 30-வது வார்டு திமுக நகரமன்ற உறுப்பினர் பக்கிரிசாமி பாலியல் புகாரில் சிக்கியது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 12) சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,

“கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சக்திநகரில் இயங்கி வரக்கூடிய தனியார் மழலையர் தொடக்கப்பள்ளி ஒன்றில் யுகேஜி பயின்று வரக்கூடிய புதுப்பேட்டையைச் சேர்ந்த 6 வயது சிறுமி 11.04.2023 அன்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு சென்ற பின்னர் தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அந்த சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த சிறுமி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் அப்பள்ளியின் தாளாளரும் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியருமான பக்கிரிசாமி என்பவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்திட நான் உத்தரவிட்டுள்ளேன்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி விருத்தாசலம் நகரமன்றத்தின் 30-ஆவது வார்டு உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்தவுடன் அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு கட்சிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலரும் உரிய விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த அரசை பொறுத்தவரைக்கும் நான் செய்தி கேள்விப்படவில்லை தொலைக்காட்சியில் தான் பார்த்தேன் என்று சொல்ல தயாராக இல்லை.

இந்த செய்தி அறிந்தவுடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டேன்.

பெண்கள், குழந்தைகள் மீது குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனிதகுலத்திற்கே ஒரு அவமானச் சின்னம் என்று கருதுகிறோம்.

இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

கலாஷேத்ரா மீது நடவடிக்கை : மனித உரிமை ஆணையம் பரிந்துரை!

ஜனநாயகம் பற்றி பாஜகவிற்கு பாடம் எடுப்பதா? – கிரண் ரிஜிஜூ

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *