கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுர அலங்காரம் வைக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் வினோஜ் பன்னீர் செல்வம் இன்று (ஏப்ரல் 19) கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று சட்டமன்றத்தில் சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் “தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை” என்று கோயில் கோபுரம் வடிவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் வினோஜ் பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கல்லறையில் கோவில் கோபுரத்தை வடிவமைத்து வைத்துள்ள விடியாத திமுக அரசு! கொஞ்சமேனும் அடிப்படை அறிவு இருப்பவர்கள் இந்த காரியத்தை செய்ய மாட்டார்கள்.
இந்து மதத்தின் மீது ஆழ்ந்த வெறுப்பு கொண்ட திராவிட கூட்டத்தால் மட்டுமே இப்படியெல்லாம் செய்ய இயலும்” என்று காட்டமாக கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டனை மிரட்டிய நடத்துநர் சஸ்பெண்ட்!
தமிழ்நாட்டின் நிதி நிலை : முன்னாள் தலைமைச் செயலாளரின் ஆலோசனைகள்!