ஹரியானா தேர்தலில் போட்டியிட்ட வினேஷ் போகத் முன்னிலையால் 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலானா தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரீஸ் ஒலிம்பிக் தொடருடன் ஓய்வுபெற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் களம் புகுந்தார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவர் ஜூலானா தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்கியது.
அக்கட்சியின் கோட்டையாக இருந்த இத்தொகுதியில் பாஜகவின் ஆதிக்கத்தால் கடந்த மூன்று தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திந்தது.
இதனால் மீண்டும் அங்கு வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரஸ் இருந்த நிலையில், ஒலிம்பிக்கில் உடல் எடை காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டு, உலக அளவில் கவனம் ஈர்த்த வினேஷ் போகத் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அக்கட்சியினரிடையே நம்பிக்கையை அதிகரித்தது.
அவருடன் பாஜக சார்பில் யோகேஷ் பைராகி, ஜனநாயக் ஜனதா கட்சி (ஜே.ஜே.பி) வேட்பாளராக அமர்ஜித் தண்டா மற்றும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக மல்யுத்த வீராங்கனை கவிதா தலால் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், வினேஷ் போகத் முன்னிலை வகிக்கிறார்.
இதன்மூலம் 19 ஆண்டுகளுக்கு பிறகு ஜுலானா தொகுதியில் பெரும் வெற்றியுடன் காங்கிரஸ் கொடி மீண்டும் உயர பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ’
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஹரியானா, ஜம்மு – காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை : ஓங்கும் காங்கிரஸ்!
10 கோடி பார்வைகளை கடந்த ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்!
இந்தி பிக் பாஸில் ஒரு ’குக் வித் கோமாளி’!