விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி இன்று (ஆகஸ்ட் 31) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள தனது வீட்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விநாயகர் சிலைக்குப் பூஜை செய்து வழிபட்டார்.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விநாயகர் சதுர்த்தி மட்டுமின்றி பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படுகிற விழாக்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டியது அனைவரது கடமை.
முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக வாழ்த்து சொல்ல வேண்டியதில்லை, ஆனால் ஒரு முதல்வராக வாழ்த்துக் கூறியிருக்க வேண்டும்.
அனைத்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லவேண்டியதுதான் முறையாக இருக்கும். பாஜக வெற்றிவேல் யாத்திரை நடத்தும் போதும் தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சி இருந்தது.
அப்போது மு.க.ஸ்டாலினும் வேலை ஏந்தி சென்றார். அதுபோல ஓட்டுக்காக இல்லாமல் தற்போது மனமார்ந்த வாழ்த்துகளைப் பாகுபாடு இல்லாமல் தெரிவித்திருக்க வேண்டும்” என்று கூறினார்.
பிரியா
வல்லரசு நாடாக இந்தியா மாறும்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன்