உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்டது குறித்து பிரதமர் மோடி ஒடிசாவில் பேசியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு வழிபட்டார்.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்ல விழாவில் பிரதமர் கலந்துகொள்வதா என பலரும் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 17) ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
“விநாயகர் சதுர்த்தி என்பது வெறும் நம்பிக்கைக்கான பண்டிகை மட்டுமல்ல. இதில் சுதந்திரப் போராட்டத்திற்கு முக்கிய பங்கு உண்டு. ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரப் பசியால் நாட்டைப் பிரித்து, சாதியின் அடிப்படையில் பிளவுகளை உருவாக்கினர்.
பிரித்தாளும் கொள்கையில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் விநாயகர் பூஜையை வெறுத்தார்கள். இன்றும், அதிகாரப் பசியால் சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதில் மும்முரம் காட்டுபவர்கள் விநாயகரை வழிபட எதிர்க்கிறார்கள். அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இதுபோன்று பிளவுப்படுத்தும் சக்திகளை மேலோங்க நாம் அனுமதிக்கக் கூடாது. நான் விநாயகர் பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோபத்தில் உள்ளனர்” என்று கூறியுள்ளார் மோடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஜெயம் ரவியை ஆட்டி வைக்கும் அந்த பாடகி யார்? கோவா இல்லையாம் சுத்தமான தமிழ் பொண்ணாம்!
குக் வித் கோமாளி மணிமேகலை பற்றி அதிர்ச்சி தகவல்கள்… வீடியோ வெளியிட்டு நீக்கிய நடிகர்!