தமிழக முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து அவதூறாக பேசியதாக விழுப்புரம் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் இன்று கைது செய்யப்பட்டார்.
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று பாஜக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியபோது, “தமிழகத்திற்கு வர வேண்டிய மத்திய அரசின் பல திட்டங்களுக்கான கோடிக்கணக்கான ரூபாயை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, திமுக குடும்பத்தினர் கொள்ளையடித்து வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர்” என்று பேசியிருந்தார்.
இதுதொடர்பாக திமுக நகர துணை செயலாளர் சித்ரா விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் கலிவரதன் மீது புகாரளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் இன்று அதிகாலை மனம்பூண்டி தேவனூர் கூட்டுச்சாலையில் உள்ள கலிவரதன் இல்லத்தில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
செல்வம்
“கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்”: ராமதாஸ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பயந்து நடுங்கும் அரசாங்கம்..