விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடத்துவது தொடர்பாக, விழுப்புரம் உட்கோட்டம் டி.எஸ்.பி சுரேஷை சந்தித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (செப்டம்பர் 6) விளக்கக் கடிதம் கொடுத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடிகர் விஜய் தான் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி மற்றும் கட்சி பாடலை அறிமுகம் செய்துவைத்தார்.
தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செப்டம்பர் 23-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் மாநில மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி கோரி, விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமாலை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
இதனையடுத்து, புஸ்ஸி ஆனந்திடம் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸை விழுப்புரம் போலீசார் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி வழங்கியுள்ளனர்.
இந்தநிலையில், 21 கேள்விக்கான விளக்க கடிதத்தை விழுப்புரம் உட்கோட்டம் டி.எஸ்.பி சுரேஷை சந்தித்து புஸ்ஸி ஆனந்த் இன்று வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆன்ந்த்,
“தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக விஜய் அறிவுறுத்தலின் படி, மாநாடு நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தோம். அதனடிப்படையில், காவல்துறையினர் எங்களிடம் 21 கேள்விகள் கேட்டிருந்தார்கள்.
அதற்குரிய பதிலை காவல்துறையிடம் இன்று சமர்ப்பித்துள்ளோம். மேலதிகாரிகளிடம் பேசிவிட்டு இரண்டு நாட்களில் தகவல் தெரிவிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன பிறகு விஜய் அதிகாரப்பூர்வமாக மாநாட்டுக்கான தேதியை அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
11 YEARS OF VVS… சிவகார்த்திகேயனை ‘ஸ்டார்’ ஆக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’
மாற்றுத்திறனாளி சமூகத்தை மகாவிஷ்ணு காயப்படுத்தினார் : ஆசிரியர் சங்கர்