என்ன ராஜேஷ்…ஜெயிச்சிட்டியா? 9 ஆவது ரவுண்டில் ஸ்டாலின் போட்ட போன்!

அரசியல்

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 13) காலை தொடங்கியது.

தபால் ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று… முதல் சுற்றிலேயே முன்னிலையைத் தொடங்கிய திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 21 சுற்றுகள் முடிவில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 53 ஓட்டுகள் பெற்றார்; அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி.அன்புமணி 67 ஆயிரத்து 257 வாக்குகள் குறைவாக அதாவது 56 ஆயிரத்து 296 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். பாமக பெற்ற வாக்குகளை விட இரு மடங்குக்கு மேல் வாக்குகளை வாங்கியிருக்கிறார் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா.

அதுமட்டுமல்ல… இந்த இடைத் தேர்தலில் திமுக 60%க்கும் அதிகமாக வாக்குகளை வாங்க வேண்டும். அப்போதுதான் நாம் வெற்றி பெற்றதாக அர்த்தம் என்று மாவட்ட அமைச்சர் பொன்முடி, பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டப் பொறுப்பாளர் கௌதம சிகாமணி ஆகியோரிடம் சொல்லியிருந்தார் ஸ்டாலின். அதை செயல்படுத்தும் வகையில் 63% சதவிகிதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறார் திமுக எம்.எல்.ஏ.வாகியிருக்கும் அன்னியூர் சிவா,

விக்கிரவாண்டி பனையபுரம் அரசு பள்ளியில் வாக்கு எண்ணிக்கை ஒன்பதாவது ரவுண்டு நடந்து கொண்டிருந்தபோது மாவட்டப் பொறுப்பாளர் கௌதம சிகாமணிக்கு முதலமைச்சர் ஸ்டாலினிடம் இருந்து போன்.

’என்ன ராஜேஷ்…ஜெயிச்சுட்டியா?’ என்று கேட்டு வாழ்த்தியிருக்கிறார் முதலமைச்சர். கௌதம சிகாமணி திக்குமுக்காடி போய் நன்றி சொல்லிருக்கிறார்.

7 பேர், புல்லாங்குழல், மேடை மற்றும் உரை படமாக இருக்கக்கூடும்

இந்தத் தகவல் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து நமக்கு கிடைக்க… இதுகுறித்து விழுப்புரம் திமுக நிர்வாகிகளிடம் பேசினோம்.

“கௌதம சிகாமணியை அவரது வீட்டில் ராஜேஷ் என்றுதான் அழைப்பார்கள். அப்படித்தான் பல வருடங்களாக முதலமைச்சரும் அழைத்து வருகிறார். அந்த வகையில்தான் இன்றும் ராஜேஷ் என்றே அழைத்து, வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின்.

ஜூன் 11 ஆம் தேதிதான் விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளரான கௌதம சிகாமணியும், விக்கிரவாண்டி வேட்பாளராக அன்னியூர் சிவாவும் அறிவிக்கப்பட்டனர். முக்கியமான விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட அப்போது அவகாசம் இல்லை.

இருவரையும் அழைத்த முதலமைச்சர் ஸ்டாலின், ‘ரெண்டு பேரும் ஒத்துமையா இருந்து வெற்றி பெற்று வரணும்’ என்று சொல்லியனுப்பினார்.

அடுத்த நாளில் இருந்து காலை 5.30க்கெல்லாம் வேட்பாளர் அன்னியூர் சிவாவோடு தேர்தல் பணிக்குக் கிளம்பி விடுவார் மாவட்டப் பொறுப்பாளர் கௌதம சிகாமணி.

கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சந்திப்பெல்லாம் முடித்துவிட்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கத் தொடங்கினர்.

28 ஆம் தேதி வரை விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் ஒரு தெரு கூட விடாமல் வேட்பாளர் அன்னியூர் சிவாவோடு வாக்கு சேகரிப்பில் முழுமையாக ஒரு ரவுண்டு முடித்துவிட்டார் கௌதம சிகாமணி.

28 ஆம் தேதிக்குப் பின் எங்கெங்கே கூடுதல் வேலை பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு அங்கே மட்டும் இரண்டாவது ரவுண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

மாவட்டப் பொறுப்பாளராக பொறுப்பு கொடுத்த அன்றே இடைத் தேர்தல் வேலையும் கையோடு கொடுக்கப்பட்டதால் இரட்டிப்பு டென்ஷனில்தான் இருந்தார் கௌதம சிகாமணி.

முதல்வர் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த பிறகுதான் இயல்பு நிலைக்கு வந்தார்” என்கிறார்கள் விழுப்புரம் திமுக நிர்வாகிகள்.

வெற்றிச் சான்றிதழைப் பெற்ற பிறகு அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்;பி. ஆகியோருடன்   மாவட்டப் பொறுப்பாளர்  கௌதம சிகாமணி, எம்.எல்.ஏ. அன்னியூர் சிவா ஆகியோரை ஜீப்பில் ஊர்வலமாக திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்துக்கு அழைத்துச் சென்றனர் தொண்டர்கள்.

அதன் பின் அங்கே வாழ்த்துகளை பெற்றுக் கொண்டுவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பதற்காக புறப்பட்டு இன்று இரவே சென்னையை அடைந்தனர்.

வேந்தன்

இளையராஜா இசைநிகழ்ச்சி : சென்னை மெட்ரோ சிறப்பு சலுகை!

அமலுக்கு வந்த புதிய மதுவிலக்குத் திருத்தச் சட்டம் : என்னென்ன தண்டனைகள்?

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *