விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 12.94 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வந்த நிலையில், கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட மாம்பழப்பட்டு 66-வது வாக்குச்சாவடி, 126-வது வாக்குச்சாவடி மற்றும் ஒட்டன்காடு வெட்டி பகுதியில் அமைந்துள்ள 68-வது வாக்குச்சாவடி என மூன்று மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்களர்கள் தங்களது வாக்குகளை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில், காலை 9 மணி நிலரவப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 12.94 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறிப்பாக ஆண்கள் 17,062, பெண்கள் 13, 605 என மொத்தம் 30,667 பேர் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி தேர்தல்… இவிஎம் மெஷின் கோளாறு… வாக்குப்பதிவு தாமதம்!