விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 13) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 82.48 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சி.அன்புமணி, நாம் தமிழர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எடுத்து செல்லப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அங்கு 150 போலீசார் பாதுகாப்புடன் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
இந்தநிலையில், விக்கிரவாண்டி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் 798 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இரண்டு மேஜைகளில் தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 134 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை தொடர்ந்து பாமக வேட்பாளர் சி.அன்புமணி 21 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மொத்தம் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணைக்கையை ஒட்டி 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: விக்கிரவாண்டி வாக்கு எண்ணிக்கை முதல் மோடி மும்பை பயணம் வரை!