விக்கிரவாண்டி தொகுதியில் மூன்று இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், பொதுமக்கள் வாக்களிக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தனது சொந்த கிராமமான அன்னியூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலையிலேயே சென்று முதல் ஆளாக வாக்கு செலுத்தினார்.
அதேபோல பாமக வேட்பாளர் சி.அன்புமணி பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
இந்தநிலையில், கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட மாம்பழப்பட்டு 66-வது வாக்குச்சாவடி, கானை 126-வது வாக்குச்சாவடி மற்றும் ஒட்டன்காடு வெட்டி பகுதியில் அமைந்துள்ள 68-வது வாக்குச்சாவடி மையங்களில் இவிஎம் மெஷின் பழுதானது.
இதனால் வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து இவிஎம் மெஷினை பழுது பார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
TNPL 2024: அபார வெற்றியுடன் 2வது இடத்திற்கு முன்னேறிய திருச்சி
விக்கிரவாண்டி தேர்தல்: முதல் ஆளாக வாக்களித்த அன்னியூர் சிவா