விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இரண்டாவது சுற்றிலும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகளும் அதனை தொடர்ந்து தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அன்னியூர் சிவா முன்னிலை வகித்த நிலையில், இரண்டாவது சுற்றிலும் அவரே முன்னிலை வகிக்கிறார்.
அதன்படி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 12,002 வாக்குகளும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி 5,909 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 849 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி தேர்தல்: அன்னியூர் சிவா 5,468 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!