விக்கிரவாண்டி தேர்தல்: வெல்லப்போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை!

Published On:

| By Selvam

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 13) நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எதிர்க்கட்சியான அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்தது.

ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 82.48 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எடுத்து செல்லப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இந்தநிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகளும் அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கிராம உதவியாளர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட 150 பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், விழுப்புரம் சரக டிஐஜி திஷாமித்தல் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை 11 மணிக்கு வெற்றி வாய்ப்பு நிலவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ்: விக்கிரவாண்டி வாக்கு எண்ணிக்கை முதல் மோடி மும்பை பயணம் வரை!

கிச்சன் கீர்த்தனா: பூரி பரோட்டா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share