விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 13-ஆவது சுற்றை நெருங்கியுள்ளது.
12 சுற்று முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 76,693 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரை தொடர்ந்து பாமக வேட்பாளர் சி.அன்புமணி 33,053 வாக்குகளும், நாம் தமிழர் அபிநயா 6,422 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதனை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அவர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கலைஞரே சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்! – சீமான் விளக்கம்!
7 மாநில சட்டமன்ற இடைத் தேர்தல்: ‘இந்தியா’ கூட்டணி முன்னிலை!