விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.
இந்தநிலையில், தனது சொந்த கிராமமான அன்னியூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வந்து முதல் ஆளாக அன்னியூர் சிவா வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்னியூர் சிவா, “விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் என்ற முறையில் நான் இன்று வாக்களித்துள்ளேன். விக்கிரவாண்டி தொகுதி மக்கள் அனைவரும், ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலினின் சாதனைகள் அடிப்படையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IND vs SA: அபார வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்திய மகளிர் அணி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!