விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பாமக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வரும் ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.
என்.டி.ஏ கூட்டணியில் பாமக விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் இன்று(ஜூன் 15) பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் பகுதியைச் சேர்ந்த சி.அன்புமணி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால் 41,428 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்து தோல்வியுற்றார். இவர் வன்னியர் சங்க நிர்வாகி மற்றும் பாமக மாநில துணை தலைவராக உள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
4 அமைச்சர்களை தவிர… 12 -18% வாங்குறாங்க… : பாமக எம்.எல்.ஏ.வின் பகீர் கடிதம்!
தங்கம், வெள்ளி விலை உயர்வு : எவ்வளவு தெரியுமா?