விக்கிரவாண்டி தேர்தல்… பாமகவின் பெயரை உச்சரிக்காத ஸ்டாலின்

அரசியல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சார வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் பேசிய ஸ்டாலின் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலில் போட்டியிடும் பாமகவின் பெயரை கூட உச்சரிக்காமல் பிரச்சாரம் செய்துள்ளார்.

ஸ்டாலின் பேசிய அந்த வீடியோவில்,

“திமுக அரசு என்றாலே சமூக நீதி அரசு. இது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்துறையை உருவாக்கியதே கலைஞர் தான்.

வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 20 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கிய ஆட்சி திமுக. பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டை அதிகரித்த ஆட்சி திமுக.

அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறித்துள்ளோம். திமுகவை வளர்த்த கொள்கை குன்றான ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.

1987-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான சமூக நீதி போராளிகளுக்கான நினைவகத்தை கட்டி வருகிறோம். இது இரண்டையும் விரைவில் விழுப்புரத்தில் நான் திறந்து வைக்க இருக்கிறேன்.

திமுக துணை பொதுச்செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஆகிய இருவரும் இந்த மாவட்டத்திற்கும் தொகுதிக்கும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள்.

அனைத்து மக்களுக்கும் பொதுவான நலத்திட்டங்கள் தொடர உங்களுடைய ஆதரவை வேண்டி நிற்கிறோம். சமூக நீதிக்கு எதிரான பாஜக கூட்டணியை தோற்கடிப்பதன் மூலமாக சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆம்ஸ்ட்ராங் கொலை… எடப்பாடி கண்டனம்!

புதிதாக 1.48 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை: ஸ்டாலின் அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0