விக்கிரவாண்டி தேர்தல்: 19,000 வாக்கு வித்தியாசத்தில் அன்னியூர் சிவா முன்னிலை!

Published On:

| By Selvam

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஐந்தாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 31,151 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் தபால் வாக்குகள் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்தார். இந்தநிலையில், தொடர்ந்து ஐந்து சுற்றுகளிலும், அவரே முன்னிலை வகித்து வருகிறார்.

அதன்படி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 31,151 வாக்குகளும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி 11,483 வாக்குகளும், நாம் தமிழர் அபிநயா 2,275 வாக்குகளும் பெற்றுள்ளனர். 19,668 வாக்குகள் வித்தியாசத்தில் அன்னியூர் சிவா முன்னிலை வகிக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி தேர்தல்: மூன்றாவது சுற்று முடிவில் யார் முன்னிலை?

 விக்கிரவாண்டி தேர்தல்: பாமக, நாம் தமிழர் பின்னடைவு… திமுக தொடர்ந்து முன்னிலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel