விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக இன்று (ஜூன் 11) அறிவிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உயிரிழந்தார்.
எனவே, இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இதில், நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக இன்று (ஜூன் 11) அறிவிக்கப்பட்டுள்ளார். அன்னியூர் சிவா திமுக விவசாய தொழிலாளர்கள் அணி செயலாளராக உள்ளார்.
முன்னதாக, இன்று (ஜூன் 11) விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணியை நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் செஞ்சி மஸ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கர்நாடகாவிற்கு நீர்வளத்துறையா? – தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு!
மத்திய இணையமைச்சராக எல்.முருகன், சுரேஷ் கோபி பொறுப்பேற்றனர்!