விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

அரசியல்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்தநிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று (ஜூன் 10) வெளியிட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் : ஜூன் 14 – 21

வேட்புமனு பரிசீலனை : ஜூன் 24

வேட்புமனு திரும்பப்பெற : ஜூன் 26

வாக்குப்பதிவு : ஜூலை 10

வாக்கு எண்ணிக்கை : ஜூலை 13 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து, மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்றுள்ளார்.

இந்த தேர்தலின் போது விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பிகார் 1, மேற்கு வங்கம்-3,  மத்தியப் பிரதேசம் -1, பஞ்சாப் -1, உத்தராகண்ட் -2, இமாச்சல பிரதேசம் – 3 ஆகிய மாநிலங்களிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

புதிய அமைச்சரவையில் தென் மாநில அமைச்சர்களின் லிஸ்ட்… கூட்டணி கட்சி அமைச்சர்கள் யார் யார்?

புதிய அமைச்சரவையில் தென் மாநில அமைச்சர்களின் லிஸ்ட்… கூட்டணி கட்சி அமைச்சர்கள் யார் யார்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *