Video : பாஜகவில் இணைந்த விஜயதரணி : காங்கிரஸ் ரியாக்சன்!
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்த நிலையில் ராகுல் காந்தி பேசும் பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விமர்சித்துள்ளது.
கடந்த இரண்டு வாரமாக டெல்லியில் முகாமிட்டிருந்த விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி இன்று (பிப்ரவரி 24) பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
இதனையடுத்து பல ஆண்டுகளாக பாஜகவை ஏற்க மறுத்து காங்கிரஸுக்கு வாக்களித்து வரும் விளவங்கோடு தொகுதி மக்களுக்கு விஜயதரணி துரோகம் செய்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விஜயதரணியை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பேசும் பழைய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதில், “எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு RSS தான் சரியான இடம்” என்று ராகுல் காந்தி பேசுவது இடம்பெற்றுள்ளது.
https://twitter.com/INCTamilNadu/status/1761337011284099217
விஜயதரணி காங்கிரஸை விட்டு விலகிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, “விஜயதரணி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு தொடர்பாக டெல்லி செல்கிறேன் என்று தான் அனுமதி பெற்றிருந்தார். இப்போது அவர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், வழக்கு தொடர்பாக ஏதேனும் அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பது போக போக தான் தெரியும்” என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
INDvsENG : பாகிஸ்தான் வம்சாவளி சுழலில் தடுமாறும் இந்தியா!
தொடர் போராட்டம் எதிரொலி : 50 லட்சம் பேர் எழுதிய காவலர் தேர்வு ரத்து!