இன்னும் எத்தனை வருடம் தான் இதையே பேசுவீர்கள் என்று விஜயலட்சுமி விவகாரம் குறித்து ஆவேசமாக சீமான் கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்தார்.
இதனிடையே ஊட்டியில் சீமான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவரை பிடிக்க சென்னையில் இருந்து தனிப்படை ஊட்டி சென்றதாக தகவல் வெளியானது. இந்தசூழலில் சீமான் ஊட்டியில் இருந்து கோவை வந்தார்.
கோவையில் இன்று (செப்டம்பர் 3) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது என்னை பற்றி பேச சீமானுக்கு தகுதியில்லை என்று விஜயலட்சுமி கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “என் தகுதியை தீர்மானிப்பது யார்?. அவர் என்ன அன்னிபெசண்ட் அம்மையாரா. அன்னை தெரேசாவா, இரோம் சர்மிளாவா?. தகுதி இல்லை என்று சொன்னால் என்னிடம் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?
தேவையில்லாமல் எதும் கேட்காதீர்கள். கேள்விதான் கேட்க வேண்டும். கேவலங்களை கேட்க கூடாது. இதே பேச்சை எத்தனை வருடம் பேசுவீர்கள். என்னை பற்றி பேச அவருக்கு என்ன தகுதியிருக்கிறது” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
“இந்த விவகாரத்தை பற்றி விவாதிக்க எதுவும் இல்லை. என்னுடன் திருமணம் நடந்திருந்தால் புகைப்படத்தை காட்ட சொல்லுங்கள். எனக்கு முன்னதாக எத்தனை பேருடன் திருமணம் நடந்திருக்கிறது. என்னை பார்த்தாலே உங்களுக்கு வன்மம், அருவருப்பு இருக்கிறது.
நான் இப்போது மக்களுக்காக போராட வேண்டுமா? அல்லது விஜயலட்சுமியை எதிர்த்து போராட வேண்டுமா?” என கேள்வி எழுப்பினார் சீமான்.
“இந்த விஜயலட்சுமி பிரச்சினை இருக்கிறது பாதிக்கப்பட்டேன் என்கிறார். அந்த விஜயலட்சுமிக்கு (வீரலட்சுமி) என்ன பிரச்சினை. இந்த விஜயலட்சுமிக்கு வீரலட்சுமி டப்பிங்கா?. இவர்களுக்கு உதவி தேவை முடிந்தவுடன் உதவியவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பார்கள். என்னுடன் இருப்பவர்கள் இவர்களை பற்றி கேட்கும் போது இரண்டு நாளில் ஒருத்தர் தலைமுடியை ஒருவர் பிடித்துக்கொண்டு அடித்துக்கொண்டு கிடப்பார்கள் என்றேன். நான் சொன்ன மாதிரியே நடந்துவிட்டது” என்றார் சீமான்.
தாங்கள் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறதே என்ற கேள்விக்கு, ஐ யம் வெயிட்டிங் என்று பதிலளித்தார்.
பிரியா
உதயநிதி மீது டெல்லியில் 4 பிரிவுகளின் கீழ் புகார்!