டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும் தேமுதிக பொதுக்குழுவில் விஜயகாந்த் பங்கேற்பார் என்று கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நவம்பர் 18ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 24 நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விஜயகாந்த் இன்று (டிசம்பர் 11) வீடு திரும்பினார்.
அவர் பூரண குணமடைந்துவிட்டதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 14.12.2023 வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து உரையாற்றுவார்.
இக்கூட்டத்தில் தலைமை கட்சி நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணிக் குழு செயலாளர்கள், அணி செயலாளர்கள், , மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான் ஆகிய மாநிலச் செயலாளர்களும் இப்பொதுக்குழுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழுவில் விஜயகாந்த் பங்கேற்பார் என்ற அறிவிப்பு தேமுதிக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“உத்தரவை மீறவில்லை”: எடப்பாடி வழக்கில் பன்னீர் விளக்கம்!
விடுதலை படத்தின் உண்மையான பட்ஜெட் எவ்வளவு?… உடைத்து பேசிய வெற்றிமாறன்!